வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் வெள்ளிக்கிழமை பணிப்பகிஸ்கரிப்புடனான போராட்டத்தில் வைத்தியசாலை முன்பாக ஈடுபட்டனர்.
இதன்போது குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்கப்படுமா?, வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய், சுகாதார சேவைக்கான மதிப்பு இவ்வளவுதானா?, அரச ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்?, வேண்டும் வேண்டும் பாதுகாப்பு வேண்டும், நீதி கொடு நீதி கொடு பாதிக்கப்பட்;டவர்களுக்கு நீதி கொடு போன்ற வாசங்கள் அடங்pகய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினை கண்டிக்கும் வகையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடையாற்றும் வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட்ட ஊழியர்கள் அனைவரும் வைத்திய சேவையை இடைநிறுத்தி உத்தியோகத்தர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஒரு மணிநேரம் வைத்திய சேவைகள் இடை நிறுத்தப்பட்டமையால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், வெளிநோயாளர் பிரிவுகள் என்பன வெறிச்சோடிக் காணப்பட்டது.