கிழக்கு பல்கலை கழக அழகியற்  கற்கைகள் நிறுவக மாணவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் ஆரம்பம்

-கொரோனா சுகாதார நடைமுறையின்கீழ் தெரிவு
ரீ.எல்.ஜவ்பர்கான்–
கிழக்கு பல்கலை கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்திற்கான புதிய மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் இன்று(24) ஆரம்பமாகின.
தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் இந்நேர்முகத் தேர்வில் நாடகமும் அரங்கியலும்இ இசைஇ நடனம்இ கற்புல தொழில்நுட்ப கலை ஆகிய நான்கு கற்கை நெறிகளுக்குமாக புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
நாடளாவிய ரீதியலிருந்து நேர்முகத் தேர்விற்காக சுமார் 1600 மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக நிறுவக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேர்முகத் தேர்வுக்குத் தோற்றும் சகல மாணவர்களும் கொவிட் 19 தொற்று தொடர்பான சுகாதார நடைமுறைகளின்கீழ் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.