மட்டு.மாவட்டத்தில் பொது சுகாதார பாரிசோதகர்கள் பணி பகிஸ்கரிப்பில்–சுகாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

0
134
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(24) பூரண பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில்  14 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலும் சுகாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் கடமை புரியும் 62 பொது சுகாதார பரிசோதகர்களும் இப் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் டெங்கு மற்றும் கொவிட் 19 தொடர்பான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இடம் பெறவில்லை.

தமது தாய்ச் சங்கம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்கியே மட்டக்களப்பு மாவட்டத்திலும் பணி பகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க மட்டக்களப்பு கிளைத் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார்.
பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களின் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன