ஸ்ரீகொத்தாவை கைப்பற்றுவதற்கு  சிலர் பாடுபடுகின்றனர். திருமலையில் பிரதமர் மஹிந்த

0
136

(அப்துல்சலாம் யாசீம்)

ஸ்ரீகொத்தாவை கைப்பற்றுவதற்கு  சிலர் பாடுபடுகின்றனர் நாங்கள் நாட்டை அபிவிருத்தி பக்கம் கொண்டு செல்வதற்காக பாடுபடுகிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து தற்பொழுது நீயா நானா என்ற  போட்டியில்  சிறிகொத்தாவை கைப்பற்றும் நோக்கில் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் நாங்கள் நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு செல்வதற்காகவே பாடுபடுகிறோம் எனவும் மக்கள் இம்முறை தேர்தலில் சிறந்த அறிவினை பெற்று மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் உள்ள சீனி தொழிற்சாலையை புனர் நிர்மாணம் செய்து மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் இதன் போது அவர் தெரிவித்தார்.
நாங்கள் முன்னர் திருகோணமலைக்கு வரும்போதும் இரு பக்கங்களும் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் தற்போது பயமின்றி வாழ்வதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்சந்தர்ப்பத்தை தவர விட வேண்டாம் எனவும் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்குகளை அழித்து  இருவரை பாராளுமன்றம் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
இப் பிரச்சாரக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சுசந்த புஞ்சி நிலமே, ஆரியவதி கலப்பத்தி, பியந்த பத்திரன, மற்றும் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்