இன்று சிறப்பாக இடம்பெற்ற திருக்கோவில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்.

0
188
(காரைதீவு  நிருபர் சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (20) திங்கட்கிழமை  சுகாதாரநடைமுறைவிதிகளைப் பின்பற்றி    வெகுசிறப்பாதக நடைபெற்றது.

ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருககள் ஆலயகுரு சிவஸ்ரீ நீதி. இராசையாக்குருக்கள் முன்னிலையில் தீர்த்தோற்சவ்திற்கான கிரியைகள் நடைபெற்று வங்கக்கடலில் இன்று
நண்பகல் 12மணியளவில் தீர்த்தமாடப்பட்டது. வழமையைவிட குறைவான அளவு பக்த்களே தீர்த்தமாடினர்.
அன்னதானம் ஆலயத்தினுள் இடம்பெறவில்லை.  எனினும் சுமார் ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.

மரணித்த தந்தைக்கு பிதிர்க்கடன் செய்வது ஆடிஅமாவாசையின் சிறப்பாகும்.இம்முறை ஆடிஅமாவாசை உற்சவம் கடந்த  03ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று  20ஆம் திகதி திங்கட்கிழமை இவ்வுற்சவம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.

கொரோனஅச்சம் கருதி  இம்முறை வரலாற்றில் முதல்தடவையாக பிதிர்க்கடன்செலுத்தும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என ஆலயபரிபாலனசபைத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

 இன்று  தீர்த்தமன்று ஆலய கிழக்கு வாசல் பிரதேசத்தில்   ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில்  10 குருக்கள்மார் காலை 8மணிமுதல் பக்தர்களுக்கு தனியான பிதிர்க்கிரியைகள்செய்து தர்ப்பை வழங்கினார்ர்கள். இந்தியா போன்ற நாடுகளில் இந் நடைமுறை இருக்கிறது. இங்கு இம்முறை அது புதிதாக அமுலாகியது பக்தர்கள வரவேற்பைப்பெற்றுள்ளது.