தேநீருக்கு தேயிலையை வடிகட்டுவது போன்றுநமக்கு தேவையானதை எடுத்துவிட்டு மிகுதியை விட்டு விட வேண்டும்.

மாற்று கட்சியினரின் பயமும் கையாலாகாத தனமும் தெட்ட தெளிவாகின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் முன்னாள் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

அவர்தொடர்பாகவும் அவருடைய ஆதரவாளர்கள் தொடர்பாகவும் வெளிவருகின்ற விமர்சனங்கள் தொடர்பாக அவரிடம் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்மேலும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் உன்னை விமர்சிப்பவனுக்கு நீ நிரூபிக்க போராடுவதை விட உன்னை நம்பி இருப்பவர்களுக்கு உண்மையாக இரு”

எனும் லெனின் தத்துவத்துக்கு இணங்க நாம் சேவையாற்ற வேண்டிய தேவைகளும் கடமைகளும் ஏராளம் இருக்க, நம் மேல் வைக்கபடும் விமர்சனங்கள் உண்மை இல்லை எனில் அதற்காக கவலை அடையாமல்  இருக்கவேண்டும்.

தேநீருக்கு தேயிலையை வடிகட்டுவது போன்று”நமக்கு தேவையானதை எடுத்துவிட்டு மிகுதியை விட்டு விட வேண்டும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மாற்று கட்சியினரின் பயமும் கையாலாகாத தனமும் தெட்ட தெளிவாகின்றது.

பின்னால் இருந்து எம்மை விமர்சிக்கின்றார்கள் என்றால் நாம் எல்லோருக்கும் முன் இருக்கின்றோம் என்பதை கவனத்தில் வைத்து நாம் நமது கடமையை செயற்படுத்த வேண்டும்

காய்கின்ற மரத்துக்கு கல்லடி விழுவதும், நிமிர்த்த ஆணியையே வளைக்க நினைப்பதும், நேரிய வளர்ந்த மரத்தை வெட்ட நினைப்பதும் நேர்மைக்கு வந்த சவால்களே என மேலும் தெரிவித்தார்.