ஐயாவின் சிந்தனையிலிருந்து நூல் திருமலையில் வெளியீடு.

0
145
கதிரவன்

இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் மற்றும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (15) காலை இரா சம்பந்தன் இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போது இரா சம்பந்தன் தேசிய பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, கிழக்கு மாகாண விசேட செயலணி தொடர்பில் இரா சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம், சம்பந்தன் அவர்களால் திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட குடித்தொகை பற்றிய விபரங்கள் அடங்கிய புத்தகம்  வெளியிடப்பட்டது.
இந் நிகழ்வில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன், திருகோணமலை நகரசபைத் தலைவர் நா.இராஜநாயகம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.