வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அதிகாரங்களை பெற்று தமிழர்களின்  உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிகளை செயல்படுத்துவோம். — ரி..எம்.வி.பி.

கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் ஆறுமுகம் லோகேஸ்பரன் தெரிவிப்பு
 மட்டு மாறன்
வட கிழக்கு இணைக்கப்பட்ட மாகாண சபையை நாங்கள் முழுமையாக விரும்புகிறோம், அந்த வட கிழக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் பெற்று, நமது மக்களுக்கு அதனூடாக பயணிக்க வேண்டும். என்பது தான்  எமது நோக்கமாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் ஆறுமுகம் லோகேஸ்பரன் தெரிவித்தார் .
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கற்கைகளுக்கான நிலையத்தில நேற்யை தினம் (14 )  செவ்வாய்க்கிழமை மாலை  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முன்னேற்றத்துக்காக நான் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட்டிருக்கிறேன். கடந்த காலங்களில் நான் மட்டக்களப்பு அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலும் மக்களின் நலனுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, மக்களின் தேவைகளை கண்டறிந்து கிராமங்கள் தோறும் சென்று கிராம மக்களுக்காக பணியாற்றி வந்ததன் காரணத்தினால்; தான் நான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறேன்.
நமது மாவட்டத்திலே யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களும் போரினால் பாதிப்படைந்து அவர்களுடைய தேவைகளை சரியாக நிறைவேற்ற முடியாத மக்கள் தங்களுடைய தேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் மக்கள் இங்கு காணப்படுகின்றனர். அவர்களுடைய நலனுக்காக நான் முழுமையாக பாடுபடுவேன் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
என்னை வெற்றியடையச் செய்வதன் மூலமாக உறுதியான அபிவிருத்தியும் நிலையான ஒரு சமாதானத்தையும் ஏற்படுத்தி இந்த நாட்டில் ஒரு நிலையான அபிவிருத்தியின் ஊடாக நிறைந்த பயனை மக்களுக்கு செய்யவேண்டும் என்று நான் எண்ணி இருக்கிறேன்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்த தேர்தலில் மட்டக்களப்பில்  தலைமைத்துவம் இருக்கின்ற கட்சி என்ற காரணத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்து நின்று போட்டியிடுகின்றோம். எங்களைப் பொறுத்தவரையில் கட்சிகள் இணைந்து வேட்பாளராக இருக்கின்ற சகலரும்; எந்த கட்சியினுடைய அங்கத்துவத்தை பெற்றவர்களில்லை. இருந்தும் அவர்கள் ஒரு பொது மனிதர் பொதுப்பணியில் வேறு வேறு துறைகளில் பொது பணிகளை செய்தவர்களாக இருந்த படியினால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு நாங்கள் வேண்டுகோள் விடுத்தோம்.
உங்களுடைய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திலே தனிமையாக தேர்தலில் களமிறங்குவதாக இருந்தால் மட்டும் தான் நாங்கள் உங்களுடன் சேர்ந்து வேட்பாளர்களாக நிற்போம் என்று கூறினோம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் தலைவர் அதனை ஏற்றுக்கொண்டதால் களமிறங்கியுள்ளோம். எங்களைப் பொறுத்த வரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் எங்களுக்கும் தான் போட்டி இருக்கிறது மாற்று கட்சிகளைப் பற்றி நாங்கள் கவனம் செலுத்தவும் இல்லை அதில் அக்கறை எடுக்கவும் இல்லை.
கடந்த காலங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போட்டியிட்டதன் அனுபவத்தை கொண்டு நாங்கள் அவர்களுடன் இணைந்து வேட்பாளர்களாக  களமிறங்கியுள்ள காரணத்தினால் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி எங்களுடைய தேர்தல் வேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்.வாக்களிப்பு தினத்தன்று நீங்கள் பார்ப்பீர்கள் எந்த கட்சிக்கும் நிறைவான வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கிறது என்று அன்றைய தினத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
கடந்த காலங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டையும் மக்களுடைய அபிவிருத்தியையும் மையப்படுத்தி முதலாவதாக நாங்கள் செயல்பட இருக்கிறோம் இரண்டாவதாக எங்களுடைய தமிழர்களுடைய உரிமைகள் அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிகளை நாங்கள் செயல்படுத்துவோம் அந்த உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்கி உரிமையை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை எடுத்து கொண்டால் அது தமிழர்களுக்கு உரியது தமிழர்களுக்கு சொந்தமானது. அவற்றை வேறு ஒரு இனத்தார் வேறு ஒரு மதத்தார் அதை உறுதிப்படுத்தி அவர் தங்களுடைய இதுதான் என்று உறுதிப்படுத்தி சொல்லுவார் ஆனால் அது நிச்சயமாக அப்படி அல்ல திருகோணமலை மாவட்டம் தமிழ் மக்களுக்குரிய மாவட்டம் என அவர்  தெரிவித்தார்.