15 நாட்களின் பின்னர் கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் மூடப்பட்டன

0
146

(ரீ.எல்.ஜவ்பர்கான்)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாவது முறையாக இன்று மீண்டும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நான்கு மாதங்கள் வரை மூடப்பட்டு கடந்த 29ம் திகதி மீண்டும் திறக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் 15 நாட்களின் பின்னர் இன்று மூடப்பட்டன

பாடசாலைகள் மூடப்பட்டதால் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் யாவும் முற்றாக நிறுத்தப்படடிருந்ததை அவதானிக்க முடிந்தது.