எருவில் கிராமத்தில் தமிழ் அரசுக்கட்சிக்கு அமோக வரவேற்பு.

0
273

2020க்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கட்சிகளின் வேட்பாளர்கள் தமது பிரட்சார பணிகளை  மேற்கொண்டுவரும் நிலையில் எருவில் தமிழ் அரசு கட்சி கிளையின் ஏற்பாட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று மாலை (11) எருவில் சிக்கன கூட்டுறவு சங்கத்தில் வட்டாரக் கிளைத் தலைவர் சி.காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது தமிழரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஐந்து வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அந்தவகையில் இரா.சாணக்கியன்,கி.துரைராசாசிங்கம், ஞா.சிறிநேசன், மா.உதயகுமார், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தமது அறிமுகங்களையும் வீட்டுக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் கருத்துரைத்தனர்.

நிகழ்வில் தமிழ் அரசு கட்சியின் பிரதான செயற்பாட்டாளர்கள் ஆதாரவாளர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.