மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று நீங்கி பாதுகாப்பு பொருட்கள்

0
121

உள்ளூராட்சி மன்றங்களுக்கான கொரோனா வைரஸ் கிருமி தொற்று நீங்கி பாதுகாப்பு பொருட்களும் நூலங்களுக்கான புத்தகங்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயில் இருந்து பாதுகாக்க மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரசபை 9 உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நூலகங்களில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் வாசகர்களின் சுகாதாதார பாதுகாப்பு நலன் கருத்தில் உள்ளூராட்சி மன்றங்களிலும்  நூலகங்களிலும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்

அந்த வகையில் கிழக்குமாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க உள்ளூராட்சி மன்றங்களின் பங்குதாரர்களான யு என் டி பி யின் மானிய உதவியின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று நீங்கி பாதுகாப்பு பொருட்களும்  ஆசிய மன்றத்தின் உதவியின் கீழ் உள்ளூராட்சி மன்ற நூலங்களுக்கான புத்தகங்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டன

உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சின்னராஜா பிரகாஷ் தலைமையில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் இஉள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் இ உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டனர்