கல்முனை நகர மண்டபத்தில் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி.

(அஸ்லம் எஸ்.மெளலானா ) கல்முனை மாநகர சபையின் சபா மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வந்த கல்முனை நகர மண்டபத்தில் பொது நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கபட்டிருப்பதாக மாநகர மேயர் செயலகம் புதன்கிழமை (08) அறிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைவாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றும் மேயர் செயலகம் தெரிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதியை அமைக்கும் பொருட்டு பழைய கட்டிடத் தொகுதியை உடைத்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையால் கடந்த சில மாதங்களாக மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு கல்முனை நகர மண்டபத்தில் நடத்தப்பட்டு வந்தது.

எனினும் பழைய கட்டிடத் தொகுதி இன்னும் உடைத்தகற்றப் படாமையினால் அங்குள்ள சபா மண்டபத்திலேயே மாதாந்த பொதுச் சபை அமர்வை நடத்த முடியும் என்றும் நகர பண்டபத்தை பொது மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும் எனவும் கடந்த 2020-06-29 ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் அக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன்படி இம்மாத சபை அமர்வை பழைய சபா மண்டபத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் கல்முனை நகர மண்டபத்தில் பொது மக்களின் திருமணம் வைபவங்கள் உட்பட கலைஇ கலாசார விழாக்கள்இ கருத்தரங்குகள்இ கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருள்ளது என்றும் மேயர் செயலகம் தெரிவித்துள்ளது.