சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையை மாற்றி அவற்றை உயர் மட்டத்தில் நடத்தி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்……. -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

0
151
கடந்த அரசாங்கத்தின் போது நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழு உண்மையாகவே சுயாதீனமா? இல்லையா? என்பது தொடர்பில் சிக்கல் ஒன்று உள்ளமையினால் மிகவும் உயர் மட்டத்தில் சுயாதீன ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (2020.07.06) காலை வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் முறையில் மாற்றம் மேற்கொள்ளுதல், 19வது திருத்தத்தை நீக்குதல், அரசியலமைப்பில் மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற பிரதான விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட சிறந்த வெற்றியை நெருக்கமாக்கி கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன் போது கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டுள்ளமை ஊடாக இதுவரையில் பாரிய அளவிலானோர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு ஆயத்தமாகியுள்ள நிலையில், குறித்த அனைவரையும் இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு சிறந்த வெற்றியை நோக்கி பயணிக்கும் அத்தியாவசிய சந்தர்ப்பம் இதுவாகும்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை பொது தேர்தலில் அதிக ஆசனங்களின் எண்ணிக்கையை வெற்றி கொள்வதற்காக இளைஞர்களை பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
எதிர்கால தலைமைத்துவத்திற்காக வலுவான கட்சிக்கு, வலுவான அரசாங்கத்திற்கு உறுப்பினர்களாகுவற்காக அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பின்வாங்காமல் வருவார்கள் என தான் நம்பவுதாக பிரதமர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டதரணி சாகர காரியவம்சம், தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பொதுஜன பெரமுன தேர்தல் வேட்பாளர்கள் உட்பட குழுவினர் கலந்துக் கொண்டிருந்தனர்.