இரா.சாணக்கியன் உட்பட 12பேருக்கு நீதிமன்றத்தடை.

0
238

(வேதாந்தி)

வெல்லாவெளிவேத்துச்சேனை விவகாரம் இரா.சாணக்கியன் உட்பட 12பேருக்கு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் நுழைவதற்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெல்லாவெளி பொலிஸ்பிரிவில் வேத்துச்சேனை எனும்இடத்தில் 99ம்கிராமசேவகர் பிரிவில் தொல்லியல் திணைக்களத்துக்குரிய இடத்தில் எல்லைபோடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அவ்வாறு போடும் பட்சத்தில் அதற்கு எதிரானவர்களினால் எதிர்ப்பு இருப்பதாகவும் வெல்லாவெளி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை செய்துள்ளார்.

இவ்அறிக்கையின்படி மேற்படி தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்றுகூடி தடுத்து நிறுத்தும்பொருட்டு தடைஉத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கான ஏதுக்கள் இருப்பதால் 1979ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் சட்டக்கோவை பிரிவு 106 (1)பிரிவின் கீழ் பொலிஸார் கோரியவாறு தடை உத்தரவினை பிறப்பித்து கட்டளையிடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து நாம் இரா.சாணக்கியனிடம் வினவியபோது தமக்கும் கடிதம் கிடைத்துள்ளதாகவும் தான் நீதிமன்ற கட்டளையை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை குறிப்பிட்டகாணி தனியாருக்கு சொந்தமானது எனவும் இக்காணியில் பரம்பரைபரம்பரையாக மக்கள் வாழ்ந்து வருவதுடன் ஆலயங்கள் உள்ளதாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்டகாணி தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானது என இதுவரை வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடாத நிலையில் எவ்வாறு எல்லைபோடமுடியுமெனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக சட்டநடவடிக்கை மேற்கொள்ள தமிழ்தேசியகூட்டமைப்பு நடவடிக்கையெடுதட்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.