ஹட்டன் நுவரெலியா வீதியில் நானுஓயாவில் பகுதியில் விபத்து!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரதல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பொலன்னறுவை பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி ஏற்றிச் சென்ற பாரவூர்தீ ஒன்று நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (06.07.2020) காலை 10.00 மணியளவில்  விபத்துக்குள்ளாகியுள்ளது.உதவியாளர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார், சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

தலவாக்கலை நிருபர்