மட்டக்களப்பில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய 11பேருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்-வாகனங்கள் மீட்பு

0
205

  ( ரீ.எல்.ஜே.கே)

தேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இரு அரசியல் கட்சிகளின் 11 ஆதரவாளர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

காத்தான்;குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டிய தமிழர் விடுதலைக் கூட்டனணி ஆதரவாளர்கள் 9 பேரையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தல் சட்டத்திற்கு முரணான முறையில் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களில் சுவரொட்டிகளை ஒட்டிய இரு அரசியல் கட்சிகளின் 11 ஆதரவாளர்களையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் சுவரொட்டிகளை ஒட்டிய தமிழர் விடுதலைக் கூட்டனணி ஆதரவாளர்கள் 9 பேரையும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியைச் சேர்ந்த இருவரையும் காத்தான்குடி பொலிசார் கைது செய்ததுடன் அவர்களால் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் ஆட்டோவையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.