திருமலையில் 10வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

0
127
( அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் (10) சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் குச்சவெளி, நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் எனவும்  தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சிறுமியின் தாய் மருந்து எடுப்பதற்காக சென்ற போது தந்தையுடன் வீட்டுக்கு வழமையாக வரும் தந்தையின் நண்பர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும்,  இதனையடுத்து சிறுமி அழுத வண்ணம் தனக்கு நடந்த சம்பவத்தை கூறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
 இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையதையடுத்து  சந்தேக நபரை பொலிசார் கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.