கல்முனை துரைவந்தியமேடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவன் விபத்தில் பரிதாப மரணம்.

0
166

(செல்லையா  பேரின்பராசா)
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
சேனைக்குடியிருப்பு கிராமத்தைச்
சேர்ந்த பாடசாலை மாணவனான
மோ.ஜதுர்சன்(வயது. 10) நேற்று
மாலை (03.07.2020) குளத்தை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட
கனரக வாகனத்தின் சில்லுக்குள்
அகப்பட்டு மிகவும் பரிதாபகரமான
முறையில் உயிரிழந்துள்ளார்.

கல்முனை துரைவந்தியமேடு அரசினர்
தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம்
ஐந்து வகுப்பில் கல்வி பயிலும் இம்
மாணவன் இன்னும் சில நாட்களின்
பின்னர் தரம் ஐந்து புலமைப் பரிசில்
பரீட்சை எழுதுவதற்கு தயாராகவிருந்தவர்.

இவரது மரணம் தொடர்பான விசாரணையினை கல்முனைப்
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். இம் மாணவனின்
சடலம் கல்முனை வடக்கு ஆதார
வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.