கல்முனையில் இந்துமதபிரசாராகளுக்கு தலைமைத்துவப்பயிற்சிக்கருத்தரங்கு!

0
107
காரைதீவு  நிருபர் சகா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் நிருவாக சபை உறுப்பினர்கள் இந்து மன்றங்கள்இ அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி கருத்தரங்கு  (03)வெள்ளிக்கிழமை  பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர்களான  கு.ஜெயராஜி  என்.பிரதாப் கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.

இந்து சமயத்தலைவர்களாக மிக அதிகமானோர் இக்கருத்தரங்கில் பங்குபற்றியதுடன் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

நேற்று நாவிதன்வெளி பிரதேசத்திலும் இடம்பெற்றிருந்தன இந்து கலாசார திணைக்களத்தால் பிரதேசங்கள் தோறும் இடம்பெறும் தலைமைத்துவ கருத்தரங்கானது அம்பாறை மாவட்டத்திலேயெ முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.