உகந்தை முருகனாலயத்தின் ஆடிவேல்விழாவையொட்டி சிரமதானம்!

வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழாவையொட்டி சமகாலத்தில் பரவலாக சிரமதானங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆடிவேல் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.அந்தவகையில் வழமைபோல திருக்கோவில் வலயக்கல்விப்பணிமனையினர் நேற்றுமுன்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையிலhன குழுவினர் அங்கு சென்று பாரிய சிரமதானத்தை மேற்கொண்டனர். இஙகு பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சிரமதானத்திலீடுபடுவதைக்காணலாம்.

படங்கள்  காரைதீவு  நிருபர் சகா