உரிமையை இழக்காத அபிவிருத்தி, மக்கள் ஆலோசனைசபைகள் மூலமே எனது செயற்பாடுகள். மாணிக்கம் உதயகுமார்.

0
157

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஆலோசனைசபைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் கல்வி பொருளாதார அரசியல் விளையாட்டு கலை பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியகூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மாணிக்கம் உதயகுமாரின்  கட்சி அலுவலகம் இன்று மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று காலை மாமாங்கம் பிள்ளையார் ஆலயம் மற்றும், கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனையை தொடர்ந்து காலை 10.00 மணியளவில் இந்த காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

காரியாலயத்தை திறந்து வைத்து அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

நாம் உரிமையை இழக்காத அபிவிருத்தியினை மக்கள் மத்தியில் முன்னெடுப்பதற்கு எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

எனது எண்ணத்தில் கிராம மட்டகுழுக்கள் அமைக்கப்படுவதுடன் கிராமங்கள் தோறும் மக்கள் மக்களைசந்திப்பதற்காக கிராமவலத்தின் ஊடாக மக்கள்குறைகேள்முறைமையொன்றும் ஏற்படுத்தப்படும் என்றார்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின்  செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் ஞானமுத்துஸ்ரீநேசன், வேட்பாளர்களான பொறியியலாளர் மு.ஞானப்பிரகாசம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,

பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள்,  தமிழரசின் இளைஞரணி தலைவர் சேயோன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.