மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் காரியாலயம் திறந்துவைக்கப்படவுள்ளது

பொதுத் தேர்தல் 2020 இற்கான பிரசார நடவடிக்கைகளை முண்னெடுக்கும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான தேர்தல் காரியாலயம் நாளை (01) திருமலை வீதியில் திறந்து வைக்கப்படவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இராஜன் மயில்வாகனத்தின் தலைமையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சதாசிவம் வியாளேந்திரனை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்களால் இத்தேர்தல் பிரச்சார அலுவலகம் எதிர்வரும் 1.07.2020 புதன்கிழமை மு.ப. 11.30 மணிக்கு இல. 496, ஊரணி வெள்ளைக்குட்டியர் சந்தி திருமலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.