பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்.

0
179
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (29.06.2020) ஒலுவில் தனியார் வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளர் எஸ்.எம்.எம்.இர்ஸாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி சிரியாணி விஜயவிக்கிரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் பிரதேசமட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பான வேலைத்திட்டம் அடங்கிய வழிகாட்டல் ஆவனங்கள் பிரதம அதிதியினால் வழங்கிவைக்கப்பட்டன. இதில் கட்சியின் கிழக்கு மாகாண ஆலோசகர் எம்.ஏ.ஆசாத், மாவட்ட குழுத் தலைவர் எம்.எல்.எம்.பரீட் – பரீன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.