உரிமையுடன் கூடிய அபிவிருத்தியினை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் இல்லை.

0
141

தமிழர் விடுதலைக்கூட்டனியின் வேட்பாளர் சண்.குகநாதன்

(க.விஜயரெத்தினம்)
கிழக்கு தமிழ் மக்கள்  சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு உரிமையும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என தமிழர் விடுதலைக்கூட்டனியின் வேட்பாளர் சண்.குகநாதன் தெரிவித்தார்.

இவ்வாறு(28)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டமானது அபிவிருத்தியில் பின்னோக்கிச் செல்கின்றது. காரணம் உரிமையுடன் கூடிய அபிவிருத்தியினை முன்னெடுக்கக் கூடிய அரசியல் தலைமைகள் கிழக்கு மாகாணத்தில் இல்லாமை பாரிய குறையாகவும்,சவாலாகவும் உள்ளது.இதனை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் தேர்வு ஊடாக பாராளுமன்றம் செல்லும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும்..என்னை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்புவீர்கள் என முழு நம்பிக்கை இருக்கின்றது. அவ்வாறு பாராளுமன்றம் சென்ற பிற்பாடு தமிழ்மக்களுக்காக முழு நேர சேவையில் ஈடுபடுவேன்.நான் உண்மை பொய்கூறி அரசியல் நடத்தும் எண்ணம் எனக்கு இல்லை. மட்டு மாவட்ட தமிழ் மக்கள் முழுமையாக எனது வெற்றிக்கு நேசக்கரம் வழங்க வேண்டும்.நான் தோற்றுப்போனால் மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் தோற்பதற்கு சமனானதாகும்.தமிழ்மக்களின் பிரச்சனை எனக்கு தெட்டத்தெளிவாகும்.தமிழ்மக்களின் பிரச்சனையை பாராளுமன்றத்தில் ஒழிக்கச் செய்வதற்கு நான் குரல்கொடுப்பேன் என்றார்.