உரிமையை இழந்த அபிவிருத்தி எமது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எமதுஇலக்கு மா.உதயகுமார்

0
73

உரிமையை இழந்த அபிவிருத்தி எமது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எமதுஇலக்கு என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை கண்டலடிப்பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொது அமைப்புக்களுடனான சந்திப்பின்போதே இக்கருத்தினை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துதெரிவிக்கையில் தற்போது நமது மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்யுவதிகள் வேலைவாய்ப்பின்றியுள்ளனர்.நாம் அரச தொழில்களை நம்பிராமல்  தொழில்வாய்ப்புகளை  உருவாக்கக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.அதற்காக என்னால் தற்போது பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக நிதியுதவிவழங்க நமது புலமபெயர்ந்த உறவுகள் முன்வந்துள்ளார்கள்.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் குடம்பங்களுக்கு தலைமைதாங்கும் குடும்பங்களின் எதிர்கால நன்மைக்காக பல்வேறுதிட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.

எதுஎப்படியிருந்தாலும் தமிழர்களாகியநாம் நமது மண்ணில் சுயகௌரவத்துடன் வாழக்கூடியநிலை ஏற்படுத்தப்படவேண்டும்.இதற்கு எமக்கு அரசியல் தீர்வு முக்கியம் இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எடுத்தியம்பக்கூடிய சக்தி தமிழ் தேசியகூட்டமைப்பே என்றார்