பாலம் அமைத்து தருவோம் என நான்கு தசாப்தகாலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது.

(ரவி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல்கள் வரும்போது பொய்வாக்குறுதிகளை பாராளுமன்ற தேர்தல் அபேட்சகர்கள் மக்களுக்கு அளிப்பது சர்வசாதாரணமான விடயம்.இதற்கு ஒரு சான்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறுமன்வெளி மண்டூர் படகுத்துறை பாலமேயாகும்.

பாலம் அமைத்து தருவோம் என நான்கு தசாப்தகாலமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் புஸ்வானமாகிவிட்டது.

நான்கு தடவைகள் பாலத்திற்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன.அடிக்கற்கள் நாட்டப்பட்ட இடமே தெரியாமல் போய்விட்டது.ஆனால் இம்முறை மக்கள் தெளிவாக உள்ளனர்.திடமான கொள்கை கட்சிமாறாத உறுதி பொய் அற்ற வாக்குறுதி அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மக்களோடு மக்களாக வாழும் தன்மை நேற்று அரசு இன்று தேசியம் பேசாத கொள்கை மொழித்தேர்ச்சி போன்றவற்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.