மட்டக்களப்பில் வரட்சியால் ஆற்றுவாயை வெட்ட அனுமதிக்கமுடியாதென செயலணிக்குழு தீர்மானம்

(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)

மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான கால நிலையில்மட்டக்களப்பு வாவியைகடலில்சங்கமிக்கும் முகத்து வாரம் ஆற்றுவாயை வெட்டி வாவிநீரை கடலுக்குள் அனுப்பும் செயல்பாட்டினை அனுமதிக்கமுடியாதென இம்மாவட்டத்தின் ஆற்றுவாய் வெட்டும் பணிகளை தீர்மானிக்கும் மாவட்ட செய லணிக்குழு இன்று( 2 7) தீர்மானித்துள்ளது .

 அம்பாறைமாவட்டத்தின்கரைவாகு வட்டை நெல் கண்டத்தில் அண்மையில் பெய்த மழையினால் விவசாயிகளின் நெல்வயல்கள் மழைநீரில் மூழ்கியிருப்பத்தால்அந்நீரை வெளியேற்ற அப்பகுதி விவசாயிகள் மட்டக்களப்பு வாவியைகடலில்சங்கமிக்கும் ஆற்றுவாயை வெட்டிவிடுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் அப்பகுதி விவசாயிகளும் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபரும் முன்வைத்தகோரிக்கைக்கமைய இன்று துறை சார்ந்த ஆற்றுவாய் வெட்டும் பணிகளை தீர்மானிக் கும் செயலணிக்குழுவின் விசேட கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில்  குறித்த விவசாயிகளின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில்  உதவக்கூடிய ஆலோசனையும் அனுமதியையும் வழங்குமாறு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாகோரிக்கை விடுத்தார் .

 இதன்போது இம்மாவட்டத்தில் நிலவும் வரட்சியான சூழ்நிலையில் ஒன்பதுபிரதேசசெயலகபிரிவுகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவு வதால் வவுஷர்மூலம் குடிநீர்வவழங்கப்படவதாகவும் வழமைபோல இம்மாவட்டத்தின் வயல்நிலங்கள் போதியளவு மூழ்கியும் குளங் களில் நீர்நிரம்பியும்காணப்படாததாலும் இதனைமீறி இயற்கைக்கு மாறாக ஆற்றுவாய் அகழப்பட்டால் நிலத்தடிநீர் முற்றாக வற்றி பெரும் நீர்ப்பற்றாக்குறை நிலவ சந்தர்ப்பம் ஏற்படுமென்று இந்த செயலணியின் துறைசார்ந்த அதிகாரிகள் விவசாய ,நீர்ப்பாசன மற்றும்மீன்பிடி திணைக்களங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி பெரும் ஆட்சேபனையை தெரிவித்தனர்.

மேலும் மட்டக்களப்பு நன்னீர் மீன்பிடியாளர்களும் வாவியின் பெருமளவு மீன் கடலுக்குள் அனுப்பப்பட்டு தமது மீன்பிடி தொழிலுக்கு பெரும் பாதிப்பு உள்ளதாகவும் தமது பெருத்த ஆட்சேபனையை இங்கு தெரிவித்துக்கொண்டனர்.

குறித்த மட்டக்களப்பு வாவியைகடலில்சங்கமிக்கும் ஆற்றுவாயை அகழ்ந்துவிட மாவட்டசெயலணியின்  பலத்த ஆட்சேபனைக்கு மத்தியில் ஆற்றுவாயை அகழ்ந்து வாவிநீரை கடலுக்குள் அனுப்பும் செயல்பாட்டினை அனுமதிக்கமுடியாதென இம்மாவட்டத்தின் ஆற்றுவாய் வெட்டும் பணிகளை தீர்மானிக்கும் செயலணிக்குழு தீர்மானித்தது .

இந்த செயலணி கூட்டத்தில்மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த்,மத்திய நீர்ப்பாசனபணிப்பாளர் எஸ்.எம்.பீ. அசார் .மாகாண நீர்ப்பாசனபணிப்பாளர் எஸ்.ராஜ கோபாலசிங் கம்.வீதிஅபிவிருத்திஅதிகார சபையின் பிரதம எந்திரி திருமதி கலை வாணி வன்னியசிங்கம்,மாநகர பிரதி ஆணையாளர் உதய குமார் சிவராசாகமநல சேவைகள் திணைக்களபிரதி உதவி ஆணை யாளர் கே.ஜெகன்நாத்உட்பட மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகி யிருந்தனர்.