மட்டக்களப்பு காத்தான்குடியில் தும்பங்காய் அறுவடை நிகழ்வு

தும்பங்காய் அறுவடை நிகழ்வு இன்று மட்டக்களப்பு காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவில் நடைபெற்றது.

மட்டக்களப்பு புதிய காத்தான்குடி 01 றிஸ்வி நகர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உள்ள எ.பி.எம்.மொய்தீன் வீட்டு தோட்டத்தில் பயிர் செய்யப்பட்ட முன்மாதிரி பயிர்ச் செய்கையான தும்பங்காய் செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு காத்தான்குடி விவசாயப் போதனாசிரியர் முபீதா றமீஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற தும்பங்காய் அறுவடை நிகழ்வில் மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி வலயம் உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், புதிய காத்தான்குடி கிராமசேவை உத்தியோகத்தர் மபாஷா சுல்பிகார், விவசாய பாடவிதான உத்தியோகத்தர்களான என்.விவேகானந்தராஜா, எம்.ருபேஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.