மண்டபத்தடி விவசாய போதனாசிரியர் பிரிவில் பயிர்ச் சிகிச்சை முகாம் .

0
190

(எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் மண்டபத்தடி விவசாய போதனாசிரியர் பிரிவில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றுவரும் நிரந்தர பயிர்ச் சிகிச்சை முகாம்   வௌ்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

இந்த பயிர் சிகிச்சை முகாம் மண்டபத்தடி விவசாய விரிவாக்கல் நிலைய விவசாய போதனாசிரியர்களான அ.தினேஸ்காந், ஞா.சுதர்சனா, ப.சகாப்தன் ஆகியோரினால் நடாத்தப்பட்டது.

இம் முகாமில் அப்பிரதேச விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் காணப்படும் தொழிநுட்ப ரீதியான  மற்றும் நோய் பீடைத் தாக்கங்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொண்டனர்.

வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில்  தாண்டியடியில் நடைபெறும் வாராந்த பொதுச்சந்தை தொகுதியில் இவ் நிரந்தர பயிர்ச் சிகிச்சை முகாமானது நடைபெறும் என வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல்  தெரிவித்தார்.

இந்த பயிர் சிகிச்சை முகாமில் பல விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொண்டதுடன் இன்றைய நிகழ்வில் வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல், பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் ஆ.ருபேஸினி ஆகியயோரும் கலந்து கொண்டனர்.