நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் கொள்ளையிட்ட நபர் சீசீரீவி உதவியுடன் கைது—பணம் மோட்டார் சைக்கிள் பொருட்கள் மீட்பு

0
181
ரீ.எல் ஜே.கே)
மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து பணம் காசோலைகள் தஸ்தாவேஜூகள் அடங்கிய கறுப்பு நிற பையை பட்டப்பகலில் கொள்ளையிட்ட நபரை சீரிவி கமறாவின் உதவியுடன் ,நேற்று25) காலை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு கல்லடி பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா பட்டா வானத்திலிருந்து 48000 ரூபாய் பணம் காசோலைகள் உட்பட பெருமளவு தஸ்தாவேஜூகள் அடங்கிய பை கொள்ளையிடப்பட்டது தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர்; மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ,டத்திற்கு அருகிலும் முன்னாலும் பொருத்தப்பட்டிருந்த ,ரு பாடசாலைகளின் சீசீரீவி கமறாக்களின் உதவியுடன் சந்தேக நபர் கைது செய்யப்படடுள்ளார்.

அவரிடருந்து 48000 ரூபாய் பணம் அடங்கிய கறுப்புப் பை கொளளைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் ஜாக்கட் உட்பட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்; படுத்தப்படவுள்ளார்.காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.