சரியான தலைமையுடன் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . லக்ஸ்மன்

0
68
கதிரவன்)
திருகோணமலையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ்பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற நோக்கில் எனது சுயவிருப்பின் பேரில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்  ஆகியநான் தேர்தலிலிருந்து விலகி எனது பூரணஆதரவினை தமிழ்தேசியகூட்டமைப்புக்கு வழங்கவுள்ளேன் என பேரின்பவரதன் லக்ஸ்மன் தெரிவித்தார்.

 நேற்று திருமலையில் வைத்தே இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வைநோக்கி சென்று கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் சரியான தலைமையுடன் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . தற்போது திருமலைமக்களாகிய நாம் வாக்குகளை சிதறடிக்காமல் தலைசிறந்த தலைமையின்கீழ் பயணித்து பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கவேண்டும்.
எனவே இத்தேர்தலில் இருந்து விலகுவதுடன் எனது முழு ஆதரவினை த.தே.கூட்டமைப்புக்கு வழங்கி அவர்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன் என்றார்.