நிந்தவூரில் மகளிர் கமக்காரர் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.

0
171
பைஷல் இஸ்மாயில் –
இயற்கையைப் பாதுகாக்க இன்றே இணைந்திடுங்கள் எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையின் சுற்றாடல் கழக சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி ஜனாதிபதி பதக்க செயற்பாட்டாளர்களின் இயற்கைக் கரங்கள் அமைப்பினரால் நிந்தவூர் பிரதேசத்தில் சுற்றாடல் முன்னோடி செயற்பாட்டில் மகளிர் கமக்காரர் பயனாளிகளுக்கு பயிர்க்கன்றுகள் இன்றைய தினம் (25) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் இயற்கைக் கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.ஹஸ்னத் அத்பா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலய சுற்றாடல் இணைப்பதிகாரி திருமேதி புஷ்பராஜினி செவ்வேல்குமரன், சுற்றாடல் முன்னோடி கோட்ட ஆணையாளர் திருமதி என்.எச்.எம். சபீக், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் உள்ளிட்ட சுற்றாடல் கழக உறுப்பினர்கள், சமுர்த்திப் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பிரிவு மாணவர்களினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சுற்றாடல் கழகமானது அண்மைக்காலமாக பல்வேறு வகையான சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தி வருவதோடு, குறிப்பாக இவ்விளம் மாணவர்களால் சுற்றாடல் கழிவுகளை மீள் உற்பத்தி செய்வதுடன், டயர், சுரட்டை, பிளாஸ்டிக் கழிவுகளை மீள் உற்பத்தி மூலம் சுற்றுச்சூழலுக்கு பயன் தரும் விடயமாக மாற்றி வருகின்றனர்.
இதுதவிர இந்த கழகத்தைச் சேர்ந்த மாணவி ஏ.ஆர் பாத்திமா றுசைனாவினால் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொம்மையொன்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்