மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் ’06 சமுக சேவைகள் அமைப்பின் 10வது ஒன்று கூடலும் 2020ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும்

0
238

பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை மனாரியன்ஸ் விங்ஸ் ’06 சமுக சேவைகள் அமைப்பின் 10வது ஆண்டினையொட்டி உறுப்பினர்களின் ஒன்று கூடலும் 2020ஆம் ஆண்டுக்கான ன நிர்வாகத் தெரிவும் அண்மையில் முன்னாள் கெளரவ செயலாளர் ஏ.எம்.சப்ரின்  தலைமையில்  மருதமுனை எம்.சி ரெஸ்டூடன் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கௌரவ அதிதியாக கல்முனை பிரதேச செயலகத்தின் சமுக சேவைகள் உத்தியோகத்தர் திரு. ஜெய்ஸான் மஹ்தூம் பங்குபற்றியதோடு அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதில் அமைப்பின கடந்தகால விடயங்கள் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டதோடு அமைப்பின் எதிர்கால விடயங்கள் தொடர்பில் முக்கிய அறிவுரைகளும் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 2020/2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகிகளாக பின்வருவோர்  ஏனமனதாக தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் எம்.எஸ்.அபாதி அஹமட்,உபதவைர் எம்.ஏ.சி.எம்.ரொஷான்,செயலாளர் ஐ.எல்.எம்.ஹஸ்மி,உப செயலாளர்எம். ஜே.எம்.அப்சான், பொருளாளர் எம்.எம்.வஸீம் அஹமட், கணக்காய்வாளர் எம்.முஸ்தாக் மனாஸிர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் ஊடகம் எச்.எம்.ஹஸ்ஸான்,விளையாட்டு ஏ.ஆர்.எம்.அனஸ், மருத்துவம் எம்.ஏ.எம்.அஸ்மீர்,சமூக சேவை எம்.ஜே.எம்.சனீர்,ஆகியோருடன் உயர்பீட உறுப்பினர்களாக எம்.ஜே.எம்.ஜெஸீம்,ஏ.ஆர் .நிஸ்பாக் அஹமட்,என்.உம்.சமீர், எம்.மிஸ்தாக் அஹமட் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை பலதரப்பட்ட சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.