களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் வைத்தியர்கள்பற்றாக்குறையை நீக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்

0
186
 (கமல்)

களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் வைத்தியர்கள்பற்றாக்குறையை நீக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்மொன்று வைத்தியசாலை முன்பாக நேற்று  முன்னெடுக்ப்பட்டது.

வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் பொதுமக்களும் இணைந்து குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்த்தினை முன்னெடுத்திருந்தனர்.
வைத்தியர்களை நியமியுங்கள், எமது வைத்தியசாலையை புறந்தள்ளாதே, வைத்தியசாலையை காப்பாற்றுங்கள் போன்ற வாசங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எமது வைத்தியசாலையானது பட்டிருப்பு தொகுதி மக்களின் வைத்திய தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய வைகையில் அமையப்பெற்றுள்ளது. குறித்த வைத்தியசாலையில் ஐம்பத்தொரு வைத்தியர்களுக்கானவெற்றிடங்கள் காணப்படுகின்றபோதும். பதின்னான்கு வைத்தியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பல வைத்தியர்கள் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றம் பெற்று செல்கின்றனர். இதனால் வைத்தியசாலையினால் நோயளிகள் எதிர்பார்க்கின்ற சிகிச்சையினை வழங்கமுடியாதுள்ளதாகவும். இதனை கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது ஆர்ப்பாட்ட காரர்கள் கோரிக்கை விடுத்தனர்…..