தேசிய காங்கிரஸின் வெற்றிக்கு இளைஞர்கள் களத்தில் நின்று செயற்பட தயார் – தவிசாளர் றாசீக் தெரிவிப்பு

0
80
(றிஸ்வான் சாலிஹூ)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய காங்கிரஸ் கட்சியையும், கட்சியின் தலைமையையும் வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இளைஞர்கள் களத்தில் நின்று செயற்பட தயாராக இருப்பதாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக் தெரிவித்துள்ளார்.
இன்று (24) புதன்கிழமை மாலை அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அக்கிராம விளையாட்டு கழகங்களின் வீரர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையிலான சந்திப்பிலேயே தவிசாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தவிசாளர் அங்கு உரையாற்றுகையில்-
இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்ட தேர்தல் தொகுதியில் தேசிய காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகின்ற வேளையில், எதிர்வரும் ஆட்சியில் ஆளும் தரப்பில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு கட்சி என்றால் அது தேசிய காங்கிரசை விட வேறு எந்த கட்சியாலும் முடியாத நிலை உருவாகும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
எமது தலைமையும், தலைமை வகுத்துள்ள இந்த வியூகங்களை பின்பற்றி இந்த தேர்தலை எதிர் கொள்வோமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் முடிவு அமையும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்கள் இந்த தேர்தலில் முடியுமான வரை களத்தில் நின்று எமது தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ‌.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். எமது தலைவர் வகுத்த வியூகங்கள் ஒரு போதும் தோற்றதில்லை என்று தனதுரையில் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சந்திப்பில் கலந்து கொண்ட இளைஞர் கழகங்களின் வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை இளைஞர்கள் ஆகிய நாங்கள் நிறைந்த மனதுடன் தேசிய காங்கிரஸின் வெற்றிக்காக களம் நின்று செயற்பட தயாரக இருக்கின்றோம் என்ற செய்தியை சந்தோஷமான முறையில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.
இச்சந்திப்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை உபதவிசாளர், தேசிய காங்கிரசின் பிரதேச சபை உறுப்பினர்கள்,விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் இவ்வட்டார முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.