மட்டக்களப்பில் தமிழ் தேசியகூட்டமைப்பு ஏன் பெண்களை வேட்பு மனுவில் உள்வாங்கவில்லை. நியாயம் கேட்கின்றார் மங்களேஸ்வரி.

வடகிழக்கிலுள்ள அனைத்துமாவட்டங்களிலும் வேட்பு மனுக்களில் தமிழரசுக்கட்சி பெண்களை உள்வாங்கியிருந்தபோதும் மட்டக்களப்பில் மாத்திரம் வேட்புமனுவில் பெண்களை உள்வாங்காமைக்கான நியாயம் என்னவென தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி மங்களேஸ்வரி கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்துதெரிவிக்கும்போதே இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பில் என்னுடைய வேட்புமனுவைதானே நிராகரித்தாகவும் அதற்கு கட்சியின் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் தனக்கு நன்றி தெரிவித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
            மறுபுறம் கட்சியின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மங்களேஸ்வரியின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது   அவருக்கு மாகாணசபையில் வாய்ப்பு வழங்குவதாகவே தெரிவித்திருந்தோம் என தெரிவித்துள்ளார். இவர்கள்இருவருடையகருத்துக்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
எனக்கு மட்டு மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற காரணத்தினால் பெண்களுக்கான சிறந்த கட்டமைப்பை கொண்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றார்.