என்னைஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பாராளுமன்றம் அனுப்புங்கள். வியாழேந்திரன் கோரிக்கை.

0
163

(க.விஜயரெத்தினம்)

கிழக்கு மாகாணத்தில் ஆளுங்கட்சியில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பினால்தான் எமது சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.எமது சமூகத்தின் இருப்பு கேள்விக் குறியாகும் நிலையை உடைத்தெறிய வேண்டுமானால் தமிழ்மக்களின் அரசியல்பலம் சகல அதிகாரங்களுடன் தமிழர் கைகளில் இருக்க வேண்டும்.
எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் தற்போதைய ஜனாதிபதி, பிரதமரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை ஆதரித்து  என்னைஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பாராளுமன்றம் அனுப்புங்கள்.நாம் இழந்துபோன அத்தனை அபிவிருத்தையும் நாம் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சதாசிவம் -வியாளேந்திரன் தெரிவித்தார்.

  மட்டக்களப்பு அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக அவரிடம் நேற்று(23) கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  அவர் மேலும் தெரிவிக்கையில்..
தமிழர்களின் உரிமையைக் பெறக்கூடிய கட்சி என்றும்,தனிக்கட்சி என்றும்,நாங்கள் தமிழ்கட்சி என்றும் வெற்றுக்கோசத்தை தமிழ்மக்களிடம் ஊதிவிட்டு தமிழ்மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொண்டு தமிழ்தேசிய தலைமைகள் பாராளுமன்றம் செல்கின்ற நிலைமையை தொடர்ச்சியாக காணக்கூடியதாகவுள்ளது.பாராளுமன்றம் செல்லும் தமிழ்தேசிய தலைமைகள்  அங்கே சிங்கள கட்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து மொத்த வியாபாரிகளாக்கப்பட்டு  இன்று அவர்கள் வாக்கு சேகரிக்க பழக்கப்படுள்ளார்கள்

 போலிவார்த்தைகளுக்கு  மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் மயங்கமாட்டார்கள்.இதனை தமிழ்மக்கள் நம்பி மயங்கினால் தமிழ்மக்களுக்குத்தான் ஆபத்து விளையும்.தமிழ்தேசிய தலைமைகளுக்கு ஆபத்தல்ல.அது ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்குத்தான் ஆபத்தை விளைவிக்கும்.

“உரிமை உரிமையென்று பேசிவிட்டு போனாலும்”; “நாங்கள் சலுகைக்காக சோரம் போகமாட்டோம்” என்று கூறிட்டு போகும் தமிழ்தேசிய தலைமைகள் அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் அனுபவித்திட்டுத்தான் வெளியேறுகின்றார்கள்.இவர்களால் அரசாங்க சம்பளம்,அரசாங்க பொலிஸ்,அரசாங்க பாதுகாப்பு,வாகன வரிச்சலுகைகள்,பாராளுமன்றம் சாப்பாட்டு, போன்ற அரசாங்க சலுகைகள் எல்லாத்தையும் அனுபவிக்கின்றார்கள் என்றார்