த.தே.கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் எனக்கும் வாக்களியுங்கள். மட்டுவிகாராதிபதி

–மட்டு மாறன் ;
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களுக்கு சொத்துகள். இல்லை காணிகள் இல்லையென ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கின்றேன் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதியும் சுயேசட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்தார்

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில்  ஞாயிற்றுக்கிழமை 21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
ஞானசாரதேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ் பெற்றோர்கள் பிள்ளைகளும் மனம் பாதிப்படைந்துள்ளனர் எனவே நான் தேரர் என்ற முறையில் மன்னிப்பு கேட்கின்றேன் அதேவேளை ஞானசாரதேரர் மற்றும் சில தோர்கள் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களை வெளிப்படுத்தும் போது எங்கள் நாட்டில் வாழுகின்ற மக்களை கருத்தில் கொண்டு கருத்து தெரிவிப்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றது
தமிழர்கள் அவர்களது பிரதேசங்களில் தங்களது அடையாளங்களை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற இம் மக்களுக்கு இவ்வாறான கதையைக் கேட்கும்போது தங்களது சந்ததியினருக்கு எதிர்காலத்தில் என்ன நடக்குமே என்ற சந்தேகம் ஏற்பட்டதுடன் மீண்டும் மதவாத, இனவாத, வைராக்கியம் குரோதங்கள் ஏற்பட வழிவகுக்கும்.
நான் தேர்தலில் முன்னிப்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும் இந்த நாட்டில் தயாரிக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்த வேலைத்திட்டங்களுக்கு உதவிவழங்கி அடிமட்டத்திலிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதே இன்று அரசியலில் தேவையாகவுள்ளது.
மட்டக்களப்பில் வாழுகின்ற தமிழ் முஸ்லீம் மக்களிடம்  கேட்பது என்னவென்றால் சுயேச்சைக் குழு 22 மேளச்சின்னத்தில் முதலாவது இலக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றேன் எனவே நான் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன் இதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் வரலாற்று முழுவதும் இவர்களுக்குத்தான் வாக்களித்தீர்கள்
ஒரே குடும்பத்தில் 3 வாக்கு இருப்பின் இரண்டை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒன்றை எனக்கும் அவ்வாறே முஸ்லீம் காங்கிரசுக்கு இரண்டையும் ஒன்றை எனக்கு போட்டு நாடாளுமன்றத்துக்கு என்னை அனுப்ப தெரிவு செய்யுங்கள் அவ்வாறு செய்தால் நான் நீங்கள் தெரிவு செய்யும் புத்திஜீவிகளான தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகளுடன் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தின் ஆட்சியாளர்களின் முன்னிலையில் 30 வருடங்களல்ல வரலாறு தொடக்கம் இம் மக்களின் அபிலாசைகளைகளையும் உண்மை நிலையையும் இவர்கள் கூறமுடியாமல் போயுள்ளதை கூறமுடியும்.
எனவே சிங்கள ஆட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதால் தங்களது மொழியில் கூறமுடியுமாக இருந்ததால்; இவ்வாறான கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கும் என்பதனால் தான் நாடாளுமன்றம் செல்லவுள்ளேன்
தேரர் என்றவகையில் நான் செய்ய வேண்டியது பௌத்த சாசனத்தின் மத ரீதியான பணிகளில் ஈடுபடுவதே தேரர் என்பவரின் பணியாகும் தேர்தலில் ஈடுபட உரிமையில்லை ஆனால்  இந்த அப்பாவி மக்களுக்கு இன்றுவரை அவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு சரியான நியாயம் கிடைக்கவில்லை என்றால் 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வாறான பாதிப்புக்களுக்குள்ளான இவர்களுக்கு இந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்ற காலம் தொடக்கம் அரசியலில் ஈடுபட்டுவந்த அரசியல் தலைவர்கள் நினைத்துப் பாhக்கவேண்டும்
இதுவரை  அப்பாவி தமிழ் இளைஞர்களுக்கு சூட்டப்பட்ட பெயர் எல்.ரி.ரி.  அவ்வாறே 21 உயிர்நீத்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் முஸ்லீம் இளைஞர்களுக்கு சூட்டப்பட்ட பெயர் ஸாரானின் கோளையா ஜ.எஸ்.ஜ.எஸ் என தமிழ் முஸ்லீம் ஆகிய இருவருக்கும் இனவாதிகள் மதவாதிகள் என்றும் யுத்தத்தை மேற்கொள்ளுபவர்களாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ள இந்த யுத்தத்தில் எவ்வாறான பிரச்சனைகள் ஏற்படப் போகின்றது என்ற பயம் எனக்கு இருக்கின்றது
எனவே தர்மத்தை எடுத்துக் கூறும் தேரர் என்ற வகையில் இம் மக்கள் மீண்டும் மீண்டும் இன்னல்களுக்கு முகம் கொடுக்காதவகையில் சில பொறுப்புக்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது அவர்கள் தங்களது பிரதேசங்களில் தங்களுக்கான வேலைகளை உரிய முறையில் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது
ஏனெனில் எப்போதும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது ஒவ்வொருவரும் சிங்களம் தமிழ் என பிழைகழைக் கூறிக்கொண்டுடிருக்க முடியாது தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
ஏன் என்றால்; இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன. மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ளமுடியும்
தேர்தலில் நிற்கும் ஏனைய வேட்பாளரிடம் கேட்பது என்னவென்றால் ஒவ்வொருவரைப் பற்றி அசிங்கப்படுத்த வேண்டாம் நாங்கள் மற்றவர்களை அசிங்கப்படுத்தும் போது நம்மை அசிங்கப்படுத்து அதிகமிருக்கின்றது எனவே இன்று யோசித்து மக்களுக்காக பாடுபடுங்கள் ஒன்று சேருங்கள் என கூறுவதற்கு விசேடமாக வாக்களிக்குமாறு கேட்பது உங்கள் குடும்பத்தில் 4 பேர் இருந்தால் நீங்கள் விரும்பியவருக்கு போடுவதுடன் எனக்கு ஒன்றை போடுங்கள்
புதிய அரசியல் யாப்பை 30 வருடமாக தலையில் வைத்துக் கொண்டிருந்து சரியான முறையில் தீர்வை எட்டமுடியாமால் போயிற்று  தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது ஈழம் என்ற தனிநாடல்ல நான் நன்கு அறிவேன் அம்மக்கள் அனைத்து அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்களியுங்கள்
தமிழ் அரசியல் கட்சிகள் எவருமே இந்த மட்டக்களப்பு மக்களுக்கு யாராவது நியாயங்களை வழங்கியிருந்தால் அதில் ஒன்றை காட்டுங்கள் இது தான் நாங்கள் செய்திருக்கின்றேம் என்று.  கரடியனாறு, வாகரை, வவுணதீவு, போன்ற இடங்களுக்கு செல்லவேண்டும் சாப்பாடு இல்லை. வீடு இல்லை கல்வியில்லை  இவ்வாறு ஆயிரம் மடங்கு பிரச்சனையுடன் வாழுகின்றனர் இவர்களுக்கு அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் ஆரம்பித்த வேலைத்திட்டம் என்ன இதைச் செய்திருக்கின்றோம் என வரலாற்றில் கூறக்கூடியவாறு இருக்கின்றதா? எதுவுமே இல்லை
நாடாளுமன்றத்துக்கு உண்மையை மட்டும் எடுத்துச் சொல்ல போகின்றேனே ஒழிய சாவு வீடு. கலியாணவீடு, அன்னதானம் போன்றவற்றுக்கு செல்லக்கூடிய மந்திரி பதவியை எடுக்கபோவதில்லை  மக்களின் உண்மையை எடுத்துக் கூறவே செல்கின்றேன் என்றார்