ஜோசப்பரராஜசிங்கம் போன்ற நல்ல தலைவர்கள் அன்று கூட்டமைப்பில் இருந்தார்கள். மூதூரில் கருணா

ஜோசப்பரராஜசிங்கம் விநாயகமூர்த்தி போன்ற நல்ல பண்பான தலைவர்கள் அன்று தமிழ்தேசியகூட்டமைப்பில் இருந்தார்கள்.அன்று தமிழ்தேசியகூட்டமைப்பு நல்ல பலகாரியங்களைச்செய்தது என கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் மூதூர் பட்டித்திடல் கிளைக்காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை 2020.06.21 மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் வி.முரளிதரன் கருணா இதனைத் திறந்து வைத்தார்.

முரளிதரன் தொடர்ந்து பேசுகையில்

அன்று பல நல்ல காரியங்களைச்செய்த தமிழ்தேசியகூட்டமைப்பு இன்று பிழையான வழியில் சென்றுள்ளது. இதனால்வடகிழக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நினைத்துவிட்டார்கள். அந்த மாற்றம் இத்தேர்தலின் பின் தென்படும்.

பாராளுமன்ற அதிகாரம் மாகாணசபையின் அதிகாரங்கள் ஊடாக மாற்று சமுகத்தினர் தங்களை வளப்படுத்தியுள்ளனர்.

நாம்  பாராளுமன்றத்துக்கு அனுப்பிய பிரதிநிதிகளால் எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்றார்.