ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு கட்சியின் பிரதேச அலுவலகம் திறந்து வைத்து ஆதரவாளர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொதுஜனபெரமுன கட்சியின் பிரதேச அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2020) மருதமுனையில் நடைபெற்றது.

கட்சியின் மருதமுனை அமைப்பாளர் எம்.எல்.எம்.முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சி ஆதரவாளர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க மக்கள் பிராத்தனை செய்தனர்.

மாற்று அரசியல் கட்சிகளுக்கு ஆதரவுவழங்கிவந்த பலர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர். இவ்வாறு கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு கட்சியின் பிரதேச அலுவலகத்தின் ஊடாக அங்கத்துவ அடையாள அட்டையும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச இணைப்பாளர் எஸ்.எம்.எம்.இர்ஸாட், கட்சியின் அம்பாறை மாவட்ட ஆலோசகர் எம்.ஏ.ஆசாத், மாவட்ட குழுத் தலைவர் எம்.எல்.எம்.பரீட் பரீன், மருதமுனை அலுவலகத்தின் ஆலோசகர் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எம்.ஏ.சமட் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

smart