மட்டக்களப்பு நகரில் காணாமற் போனவர் மண்டூர் முருகனை தரிசித்துவிட்டு வீட்டை வந்தடைந்தார்.

(க.விஜயரெத்தினம்)
கடந்த புதன்கிழமை(17)காணாமற்போனதாக கூறப்படும் நபரான  துறைநீலாவணை 5ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இலக்கம் 384/5B ,சின்ன லூர்த்து மாதா வீதி,சின்ன உப்போடை,மட்டக்களப்பு எனும் இடத்தை  வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி பார்த்தசாரதி(வயது-52)என்பவர் வெள்ளிக்கிழமை(19)இராத்திரி 12.00 மணியளவில் தமது மட்டக்களப்பு நகரில் உள்ள வீட்டுக்கு உயிர் ஆபத்தில்லாமல் வருகைதந்துள்ளார்.

இவ்விடயமாக மட்டக்களப்பு நகரில் உள்ள தலைமைப் பொலிஸ் நிலையத்தில் தனது  வீட்டை விட்டு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு ஒன்றை  பதிவிட்டுள்ள நிலையில் அவர் மீண்டும் வீட்டை வந்தடைந்துள்ளார்.
காணாமல் போனவர் தனது உறவினர்களிடம் சொல்லாமல் தன்னந்தனியாக  வீட்டிலிருந்து புறப்பட்டு கால்நடையாக மண்டூர் கந்தசாமி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டிட்டு அங்கு தரித்துநின்று; மீண்டும் தனது இருப்பிடம் நோக்கி கால்நடையாக வந்துள்ளார்.