போலி தங்கத்தினை அடகு வைத்தவர் கைது! : கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் சம்பவம்

0
199
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிலாந்துறையில் அமைந்துள்ள அடகு வைக்கும் நிலையம் ஒன்றில் போலி தங்கத்தினை  அடகு வைக்க சென்ற இருவர் இன்று (20) கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  பெண்ணொருவர் முச்சக்கர வண்டி ஒன்றில் வருகை தந்து குறித்த போலி தங்கத்தினை அடகு வைக்கும் நிலைய உரியமையாளரிடம்  வழங்கிய போது போலியான தங்கம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து முச்சக்கரவண்டி ஓட்டுனரையும், குறித்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண் இதற்கு முன்னரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் தெரியவருகிறது. இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.