ஓட்டமாவடியில் எச்.எம். மன்சூர் அமிர்அலியுடன் இணைந்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் –
கடந்த பிரதேச சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக ஓட்டமாவடி பிரதேச சபைக்கான ஓட்டமாவடி (208பி/02)  வேட்பாளராக போட்டியிட்ட எச்.எம். மன்சூர் நேற்று (19.06.2020) வெள்ளிக்கிழமை இரவு முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியுடன்இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஓட்டமாவடி (208பி/02) வட்டாரக்குழு கூட்டம்  நேற்று இரவு ஸ்மைல் சென்றரில் இடம் பெற்ற போது தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சருடன் இணைந்து கொண்டார்.
இது தொடர்பாக  எச்.எம். மன்சூர் கருத்து தெரிவிக்கையில் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாக வட்டார வேட்பாளராக போட்டியிட்ட நான் எனது வட்டாரத்தின் எதிர்கால அபிவிருத்தியினையும் மாவட்டத்தின் சிறந்த தலைமைத்துவத்தினை தெரிவு செய்யும் நோக்கிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை ஆதரிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.