இன்று காரைதீவில் டெங்குதடுப்பு செயற்பாட்டுக்குழுக்கூட்டம்.

காரைதீவு  நிருபர் சகா


காரைதீவுப்பிரதேசத்தில் டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துமுகமாக காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையில் (12)வெள்ளிக்கிழமை  செயற்பாட்டக்குழுக்கூட்டமொன்று நடைபெற்றது.

வைத்தியஅதிகாரி றிஸ்னிமுத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சி.ஜெகராஜன் கல்முனைப்பிராந்திய தொற்றுநோயப்பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஆரீப் பொலிஸ் அதிகாரி எ.எம்.அமீர்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காரைதீவுப்பிரதேசத்தில் இனிவருங்காலங்களில் டெங்குநோய்த்தடுப்புச்செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் தவிசாளர் கே.ஜெயசிறில் கூறுகையில் :

துறைசார்ந்த திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் அவரவர் அதிகாரத்திற்குட்பட்டவகையில் நடந்துகொள்ளவேண்டும். சுகாதாரத்திணைக்களம் உள்ளுராட்சிதிணைக்கள அதிகாரத்தில் மூக்கைநுழைக்கக்கூடாது. அதேவேளை அனைவரும் இணைந்து ஒருமித்தகருத்தில் பயணிக்கின்றபோது பொதுமக்களுக்கு தேவiயான பணிகள் சேவைகள் திருப்தியாகச் சென்றடையும் என்றார்.

மேலும் வடிகான் துப்பரவு கழிவகற்றல் என்பன சீராக நடைபெற்றுவருகின்றன. மேலும் டெங்குத்தடுப்புக்கான சகல உதவி ஒத்துழைப்புகளை பிரதேசசபை வழங்கத்தயாராக இருக்கிறது என்றார்.


பலரும் பலகருத்துக்களைக்கூறி இறுதியாக தடுப்புத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டது