பொதுஜன பெரமுனவில் ஏ.எல்.எம் அதாஉல்லாவுக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மயோன் சொல்லும் காரணம்.

 

(பீ.எம் றியாத்)

சாய்ந்தமருது சுயேச்சை குழுவினர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்போதயை ஜனாதிபதிக்கு ஆதரவான கூட்டதில் நாங்கள் மேடையேறவேண்டும் எனக்கூறினர், நானே அவர்களுக்கு அந்த களத்தை அமைத்து கொடுத்தேன், இன்று அவர்கள் வேறு திசையில் மக்களை ஏமாற்றும் அரசியல் செய்வதை பார்க்கையில் மிகவும் அசிங்கமாக இருப்பதாக முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா ஆதரவளித்தும் கூட பொத்துவில் தொகுதியில் ஜனாதிபதி கோட்டபயவுக்கு கணிசமான அளவு வாக்குள் கிடைக்கவில்லை, இந்த அடிப்படை காரணத்தினால் பொதுஜன பெரமுனவில் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை, அவருக்கு தனியே கேட்டு வென்றுவாருங்கள் என பசில் ராஜபக்ஸ அவர்கள் கடும் தொனியில் பணித்தமையினாலேயே அவர் தேசிய காங்கிரசைில் களமிறங்கியுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சரும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான மயோன் முஸ்தபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில் பொதுஜன பெரமுன ஏஜென்டுகளுக்கு வாக்களிக்காமல் நேராக எமக்கு வாக்களித்தால் நடப்பு அரசாங்கத்திடமிருந்து நிறைய சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வாய்ப்பிருக்கிறது, எனது புதல்வர் திகாமடுல்லவில் தேர்தல் கேட்கிறார் அவர் திறைமையானவர், மொழிவளம், சர்வதேச தொடர்புகள் கொண்டுள்ள அவரை தெரிவு செய்தால் பல தொண்டுகள் அவர் எமது பகுதி மக்களுக்கு செய்வார், அதை விடுத்து வெல்லாத ஏஜெண்டு வேட்பாளர்களுக்கு சாய்ந்தமருது, மற்றும் அதனை அண்டிய பகுதி மக்கள் வாக்களிக்கத்தால் அவர்களால் வெல்லவும் முடியாது சேவை செய்யவும் முடியாது, ஆகவே சாய்ந்தமருது மக்கள் தங்களின் அபிலாசயைான தனியான பிரதேச அலகு பெற எமது வெற்றியை உறுதி செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.