யாழில் ஏழு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்.

இந்தியாவில் இருந்து வர்த்தக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பிரதேசத்திற்கு வருகைதந்து மீண்டும் இந்தியா சென்ற வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாண பிரதேசத்தை சேர்ந்த 07 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த புடவை வர்த்தகர் மீண்டும் இந்தியாவிற்கு சென்ற பின்பு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினால் அறிவித்ததாக  யாழ்  சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய குறித்த வர்த்தகரிடம் புடவைகளை விலைக்கு வாங்கியவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.