மட்டக்களப்பில் கிரிக்கட் விளையாட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள  கிரிக்கெட் விளையாட்டு  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் சபையுடனான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையுடன்  மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்துடன்  இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னெடுக்கப்படவுள்ள  அபிவிருத்தி    வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட  கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் என் பி . ரஞ்சன் தலைமையில்   இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

  இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்  விளையாட்டு கழகங்கள் , பாடசாலை மாணவர்களுக்கிடையில் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவது  மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட்  சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உபதலைவர்  ரவீந்த் விக்கிரம ரத்ன , தேசிய கிரிக்கெட் சபையின்  பிரதம அதிகாரி  கமல் தர்மசிறி , .மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா . மாநகர முதல்வர்  தியாகராஜா சரவணபவன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள்  மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , வலையக்கல்விப்  பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்

(லியோன்)