இரவு 11 மணிக்கு தினமும் ஊரடங்கு அறிவிப்பு.

(சுடர்) நாடுமுழுவதும் நாளை (06) முதல் ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.
மறு அறிவித்தல்வரை இது நடைமுறையில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக ஊரடங்கு அமுலில் வருவதுடன், ஏனைய நேரங்களில் மக்கள் சமூக இடைவெளி பேணி சுகாதார முறைப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்ப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.