அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க ஏற்பாட்டில் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்

கொவிட் 19 அனர்த்தத்தினை முன்னிட்டு   இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஊடாக உலர் உணவு பொருட்கள் உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு  வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த உலருணவு பொருட்கள் யாவும் சுமார் 32  உதைப்பந்தாட்ட கழகங்களுக்கு புதன்கிழமை(3) மாலை கல்முனை  சந்தான்கேணி விளையாட்டு அரங்கில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது குறித்த உலருணவு பொருட்களை அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க  தலைவர் வை கே ரஹ்மான்  மற்றும்  சங்க செயலாளர்  எம்.ஐ.எம்.அப்துல் மனாப் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

இவ்வுலருணவு பொருட்களில்   அத்தியவசியப்பொருட்கள் உள்ளடங்குவதுடன் கொரோனா வைரஸினால் சிரமப்பட்ட கழகங்களுக்கு அம்பாரை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்க செயலாளராக மீண்டும் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் அயராத முயற்சியின் பயனாக பெற்றுக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.