காத்தான்குடி வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்காக றோபோ. படம் வீடியோ.

{"source_sid":"D96BBD37-1B53-4493-9C9E-73EFD4BEAD6C_1591199328936","subsource":"done_button","uid":"D96BBD37-1B53-4493-9C9E-73EFD4BEAD6C_1591199328920","source":"other","origin":"gallery"}

 (வேதாந்தி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா நோயாளிகள் சிகிச்சைபெற்றுவரும் காத்தான்குடி ஆதாரவைத்தியசாலைக்கு றோபோ இயந்திரமொன்று அட்லஸ் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

14இலட்சம் பெறுமதியான இவ்இயந்திரத்தை கிழக்குமாகாணசுகாதாரசேவைகள்பணிப்பாளர்  டாக்டர் அழகையா லதாகரன் உத்தியோகபூர்வமாக வைத்தியசாலை நிருவாகத்திடம் நேற்று கையளித்தார்.

நிகழ்வில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் முத்துலிங்கம் அச்சுதன் உட்பட அட்லஸ் நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

றோபோ இயந்திரமானது கொரொனா நோயாளிகளுக்கு தேவையான  மருந்து வகைகள் உணவுவகைகளை பரிமாறும் என்பதுடன் நோயாளிகள் இவ்இயந்திரத்தின மூலம் தொடரபாடல்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.